இரு கவிதைகள்

தி.ஆ : ஆவணி ஒன்பது - ஈராயிரத்து நாற்பத்து இரண்டு
வெள்ளி - கார்காலம்

அ)

இமை பிரிந்த அந்நாள் முதல்
பிறப்பின் தொழில் செய்யாது
அடிநாள் போனது
இடைநாள் போனது
அம்மா!
இந்த கடைநாளிலாவது
என் அன்னை
சமைந்த பயன் கொள்வேனா?

ஆ)

நுங்கை ஈவாது
என்
அண்ணம் அவிழாது
என்ப மொழிந்திருந்தாள்
வந்தவன் செவிடு போல கொள்ள
உன்னல் வருந்தி
உண்ணாது இருந்தாள்
பின்னாள்
வேர் வாடி மலர்ந்த பூவை
தன்னால் உணர்ந்த அவன் - பின்
தன் மடல் செவிட்டை அறுத்தான் பார்!



Comments