சல்லாபக் குற்றம்

கலப்பிசை புழித்து
புதிய பாணி புழங்க 

கலக்கும் உடை பாணியில் 
கவிதைகள் கிடக்க 

( அதாவது T சட்டையில் 
அடடா கவிதைகள் )

அகர மழையில் 
ஆனந்தம் பொங்க 

கடுக்கும் மனதில் 
ஆச்சர்யம் பூக்க 

புல்லாங்குழல் இனிப்பு 
செவினியில் அப்ப

மௌன அறையில் 
கும்மாள நெஞ்சம் 

சிரிக்காத கருப்பு 
முகத்தில் மகிழ்ச்சி 

நிலவை கண்டது போல் உணர்ச்சி 

இல்லாத பிரமனின் 
உளிகொண்ட உழைப்பு 

சுற்றி யார்யாரோ 
சுழித்த வெறுப்பு 

முகத்தை பார்த்து 
உமிழாத சினப்பு 

செய்யாத சல்லாபம் 
செய்ததை பண்ணி 

பின்னாளில் நானே
வருந்தினேன் பெண்ணே!

அந்நாளில் மொழிந்த 
காதல் கவியினை 




Comments