முயற்சி திருவினையாக்கும்

கண்டே விட்டேன் கனவை
கொண்டார் போன்ற நினைவை
ஆயினும் மனதில் புலம்பல்
என்னால் எப்படி முடியும்

வைத்திடும் அடிகள் ஒன்றும்
செய்திடும் செயல்கள் முற்றும்
பயனின்று போகுதே! - என்
திராணியும் சாகுதே!

ஆனால் முயற்சி திருவினையாக்கும்
நிமிர்ந்ததன் மெய்வருத்தும் கூலிக்கே!

Comments