குத்து மதிப்பு
குத்து மதிப்பில் உண்டானது உலகம்
குண்டக்க மண்டக்க வளர்ந்தது ஞானம்
காந்திக் கணக்கில் அழிவுகள்
சரிந்தப் பக்கம் ஓடுது நதி
விரிந்த பக்கம் ஆடுது வளி
முடிந்த மட்டும் சுடருது ஒளி
கேள்விக்கு பதில் கடவுள்
துன்பத்துக்கு பதில் இன்பம்
காட்டுதற்கு பெயர் மொழி
பெற்றால் தாய்
செய்தால் தந்தை
செத்தால் பிறப்பு
இயற்கை தானியங்கி
செயற்கை நமதியக்கி
இரண்டுக்கும் கடும் போட்டி
காரணம் இன்றி பிறந்தது உலகம்
அதனை தேடித் திரியுது மனிதம்
முடிக்க முடியாத மெகா சீரியல்
செயற்கையின் ரசிகன் இயற்கை
ரசிப்பது வரையே புவியின் ஆயுள் ஆக
செயற்கைத் தொழிலே மனிதக்கடமை
Comments
Post a Comment