அரிப்பு
கவிதை ஒரு மூளை அரிப்பு
வேதனை செய்வது
சொல்லின் நெருப்பு
காதல் ஒரு பருவ துடிப்பு
மானம் பிடுங்கும்
உறவின் கடிப்பு
மோகம் ஒரு தேக உரைப்பு
நாணப் படுவது
முடிவின் மழைப்பு
கீதம் ஒரு பறவைச் சிறகு
வலியை மறக்கும்
மயக்க மருந்து
Comments
Post a Comment