ரகசியம்
மனதின் உள்
ஒரு ரகசியம்
சிரித்தால் நகைக்கும்
அழுதால் பழிக்கும்
ஆனால் எனக்கு ஒரு ஆறுதல்
நான் நல்லவன் என்பது
நான் நல்லவன் இல்லை என்றால்
இந்த
ரகசியம் என்னை வதைக்காது
ஆம்... குற்ற உணர்வு
நல்லவரின் அடையாளம் .
உணரும் வரை!
நான் முயற்சிக்கிறேன்
உணர...
எழுதினால் ஒழியுமாம் !
எழுதினேன்
கோப்பை ஜிகா பைட்டு
ரகசியம் டேட்டுரா பைட்டு
கணினியின் நினைவகம்
துடிக்கத்தொடங்கியது
நான் எழுதிய கோப்பை யினால்
கணினிக்கும் குற்ற உணர்வு
நினைவகம்
Format புதுப்பிக்கும் வரை
அடங்கவில்லை
கணினியே இப்படியென்றால்
என் மனதினில் எவ்வளவு ?
சரி போங்கள்.
நானும்
Format புதுப்பித்து பார்க்கிறேன்
மருத்துவரே ! எனக்கு
அறுவை சிகிச்சை செய்யுங்கள் .
Comments
Post a Comment